Saturday, June 18, 2011

















வாழ்க்கையின்
தீராத கனவுகளை
கண்ணீர்த்துளிகளை
வழித்துணையை
பேரின்பத்தை
கனவு
கொள்ளை கொண்டுவிட்டது






















சிறுகச் சிறுக
சேமித்த காதல்
மொத்தமாய்
விடை பெறும் நேரம்
என்னை நீ
வழியனுப்பி வைக்கும்
ஒரு
வெய்யில் பொழுது
















இனி உனதும் எனதுமான
தனிமையில்
ஒலிக்கப் போவது
பிரிவின் பாடல்


















நினைவுகளைத்
தந்துவிட்டு
நீ மட்டும்
செல்கிறாய்























என்
வழித்துணையில்
பக்கத்து இருக்கையில்
படுக்கையில்
நீயில்லாமல்
நினைவுகளுக்குப் பக்கத்தில்
மட்டும்




















ஒரு
நூற்றாண்டுத்
துயரின் அடியில்
புதைந்திருப்பது
அடர்த்திமிகு
ஒரு காதல்















நினைவுகளைச்
சேமித்து
தூபி கட்டு










வாழ்க்கையின்
நவ கவிதை
சோகங்களாலே
எழுதப்படுகிறது
என் சாதனைகளுக்குப் பின்
கடவுளுக்குப் பிறகு
உன் பெயரே
உச்சரிக்கப்படும்

வெறுத்துப் போன
இந்த அந்தியில்
சூரியன்
இருந்தால் என்ன
முறைந்தால் என்ன
















நீ
இல்லாத
சாலையில்
இப்போது
உன் பாடல் மட்டும்
கேட்கிறது


















உறவுகளை
முடித்துக் கொள்ள
முடிகிறது               
நினைவுகளை
யார் முடிப்பது..?







No comments:

Post a Comment