நம் நட்பு
எந்தக் காதலிலும்
இல்லை
பூக்களில் இல்லை
வாழ்க்கை
தண்டவாளம் போல்
ஒரு நெருக்கம்
அன்பே!
உன் திருமணத்தில்
நானில்லை
மணமகன்
மரணம்
நினைவுகளைக்
கொல்வதில்லை
எப்போதும்
நீ
எனக்குப்
பக்கத்து இருக்கை
நினைவுகள்
உன் அன்பில்
நனைகின்றன
உன்னைத் தொலைக்கவும்
முடியாமல்
அணைக்கவும்
முடியாமல்...
நினைவுகளைச்
சேர்த்து வைப்போம்
நாளைய
பிரிவுக்காய்
அருகில்
நீ
தொலைவில்
நான்
மனதின்
கிழிஞ்சல்களை
உன்
நினைவுகளால்
தைக்கிறேன்
உன் கடலில்
அலைகள்
இல்லை
நீ
தினசரிப் பத்திரிகை
எந்த நாளும்
வந்து கொண்டே
இருக்கிறாய்
முடிந்த பிறகும்
கேட்கிறது
உன்
பாடல்
உன் தேடலில்
நான்
கிடைப்பதேயில்லை
பிரிவு
ஒவ்வொரு சொல்லாய்
எழுதுகிறது
உன்
குழந்தைத்தனம்
எந்தக்
குழந்தையிடமும்
இல்லை
என்
நினைவுகளைத்
தவிர எல்லாவற்றையும்
எரித்து விட்டாய்
வாழ்க்கையின் பாடல்
ஓயும் போது
ஆத்மானந்தம் அழுகிறது.
என்னைக்
கேட்டவளுக்கு
கண்ணீர்
கொடுத்தேன்
உனக்கும் எனக்கும்
இருக்கிறது
ஓரு அழுகை
வாழ்க்கையின் அந்தி வரை
அழ...
இப்போது
விடுதலையே
விலங்காகியிருக்கிறது...
அழியாமல்
இருப்பது
நினைவுகள்
மட்டும் தான்
என்னை
மன்னி
உன்னை
விரும்பியதற்காக
பிரிவின்
பாடல்
சத்தமாய்க்
கேட்கிறது
அழுது கொண்டே
வாழ்க்கையை
அந்திபடுத்த
எப்படி உன்னால்
முடியுமோ?
அழுவதைத்
தவிர
வேறென்ன செய்ய
முடிகிறது
நீ
செய்த
மகா தவறு
என்னை நேசித்தது தான்.
நீ
எனக்காகக்
காத்திருந்த
கனங்கள்
பொய்த்துப் போகுமென்று
நீ நினைக்கவில்லை
உன்
நிம்மதியைக்
குடிக்கிறது
வெறுமை
உன்
கண்ணீரிலும்
இருக்கிறது
அன்பு
எதிர்பாராத
தருணமொன்றில்
எல்லாவற்றையும்
முடித்துக் கொண்டாய்
அல்லது
முடித்துக் கொண்டோம்
No comments:
Post a Comment