வேண்டுமானால்
என் நினைவுகளை
எடுத்துக்கொள்
என்னை விட்டுவிடு
வாழ்க்கை
அதன்பாட்டுக்குப்
போய்க் கொண்டிருக்கிறது..
கவிதை
தந்தவள்தான்
கண்ணீரும்
தந்தால்....
உன்
மருதானிச் சிவப்பு
எந்த இரத்தத்திலும்
இல்லை.
பூக்கள்
வளர்ப்பதை
விட்டுவிட்டு
முட்கள் வளர்க்கிறேன்..
அதோ பார்
கடலுக்குள்
மழை பெய்கிறது..
நீ சோம்பல்
முறித்த போது
உடைந்தது நான்தான்..
முறித்த போது
உடைந்தது நான்தான்..
ஒரு
மீளாத்தனிமையை
பேரமைதி
போர்த்தியிருக்கிறது..
என் போர்வையில்
உன் சிதைவுகள்..
பேரிரைச்சல் போல்
ஒரு அமைதி
தண்டவாளப் பூக்களில்
அமைதி கிழித்து ஓடுகிறது
ரயில்..
உன்
நினைவுகள்
என் தோல்களில்
சாய்ந்திருக்கின்றன
உன் ஏக்கங்களை
புதைத்து விடு
நம்பிக்கைகளை
நடுவோம்
நீ
நினைவுகளைத்
துவைக்கிறாய்...
இன்னும் கேட்காத
பாடல்
நீ
வானம் இல்லை
நிலவு மட்டும்...
இந்த அந்தி
அமைதியைப் போர்த்தி
நின் கூந்தலில்
உதிருது
ஒரு பிடி மௌனம்..
புகைவண்டி
பயணிக்கிறது
நினைவு
தேங்கிக் கிடக்கின்றன..
என் ஓவியங்களில்
நீதான் வர்ணம்..
அன்றைய பகலில்
நீ வழியனுப்பவில்லை
பகல் கனத்த வெயிலைப்
பொழிந்தது